×

நாளை தெற்கு மண்டல குறைதீர் முகாம்

 

மதுரை, நவ. 6: மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் முகாம் சிஎம்ஆர் ரோட்டில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் நாளை (நவ.7) நடைபெறுகிறது. மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளான செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவதநல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜபுரம்,

பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லெட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழவெளிவீதி, கீரைத்துறை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறுலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post நாளை தெற்கு மண்டல குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : South Zone ,Madurai ,Madurai Corporation ,South ,Zone People ,Grievance Camp ,CMR Road South ,Zone Grievance Camp ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சியில் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்!!