×

பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

 

சிவகங்கை, நவ.6: கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தேசிய பெண் குழந்தை தினத்தன்று பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல் புரிந்த 18வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தின விருதுக்கான பாராட்டுப் பத்திரமும், ரூ.1லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில், 13வயதிற்கு மேல் 18வயதிற்குட்பட்ட தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் குழந்தைகள், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நவ.20க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Asha Ajith ,National Girl Child Day ,Dinakaran ,
× RELATED கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்