×

அமிர்திக்கு முதலை, பாம்பு, நட்சத்திர ஆமைகள் வருகை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி

 

கோவை மாநகராட்சி சிறு வன உயிரியல் பூங்காவில் இருந்து முதலை உட்பட வன உயிரினங்கள் கொண்டுவரப்பட்டு அமிர்தி வன உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. இவை பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.கோவை மாநகராட்சி வஉசி பூங்காவில் 3.5 ஏக்கர் பரப்பளவில் சிறு வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு பல்வேறு வகையான 600க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. பூங்காவை சுற்றிலும் ஏற்பட்ட குடியிருப்புகள், இடநெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால் அந்த பூங்காவுக்கான அனுமதியை தேசிய வன உயிரின ஆணையம் திரும்ப பெற்றது. மேலும் பூங்காவில் உள்ள வனஉயிரின பூங்கா செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதோடு இங்கு பாதுகாப்பற்ற சூழலில் உள்ள வன உயிரினங்களை வேறு வனஉயிரியல் பூங்காவுக்கு இடம் மாற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து அங்கு பராமரிக்கப்பட்டு வந்த கடமான், புள்ளி மான்கள், பல்வேறு வகையான ஊர்வன வகை விலங்குகள் என மாற்றப்பட வேண்டிய பட்டியலில் உள்ள வனஉயிரினங்களை சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வேலூர் மாவட்டம் அமிர்தி சிறு வன உயிரியல் பூங்கா ஆகியவற்றுக்கு இடம் மாற்றும் பணி கடந்த 2ம் தேதி தொடங்கியது.இதற்காக சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சேர்ந்த வனஅலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள் குழு கோவைக்கு சென்றது. அங்கு மாற்றப்பட வேண்டிய உயிரினங்களை பாதுகாப்பான முறையில் பெட்டிகளில் அடைத்து வண்டலூர் மற்றும் அமிர்திக்கு கொண்டு வரும் பணியை மேற்கொண்டது.

The post அமிர்திக்கு முதலை, பாம்பு, நட்சத்திர ஆமைகள் வருகை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Amriti ,Coimbatore Small Forest Zoo ,Forest ,
× RELATED கூடலூர், முதுமலை வனப்பகுதியில் கனமழை..!!