×

கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் மேகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

 

காஞ்சிபுரம், நவ.6: காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் அமைந்துள்ள மேகாத்தம்மன் கோயிலில் நடந்த கும்பாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் மேற்காவ நாச்சியார் என்ற மேகாத்தம்மனுக்கு புதியதாக கோயில் கட்டப்பட்டு, ராஜகோபுரம் முன் மண்டபம் உள்ளிட்டவை கட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த 29ம் தேதி கிராம தேவதை மேகாத்தம்மனுக்கு பொங்கல் வைத்து, திருவீதியுலா நடைபெற்றது.

இதனையடுத்து, 30ம் தேதி, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. பின்னர், 31ம் தேதி புதிய விக்கிரகங்களுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனைத்தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்களால் புனிதநீர் கலசங்கள், மங்கள மேல வாத்தியங்களுடன் ராஜகோபிரத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் விழா நடந்தது.

இதனைத்தொடர்ந்து மூலவர் மேகாத்தம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு இரவு மேகாத்தம்மன் திருவீதியுலா நடைபெற்றது. இதில் வழிநெடுக்கிலும் திரளான பக்தர்கள், அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தும், தேங்காய் உடைத்தும் வழிப்பட்டனர். இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கிராமத்தின் குலதெய்வ பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் மேகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Meghathamman Temple Kumbabhishekam ,Govindavadi Akaram Village ,Kanchipuram ,Kumbabhishekam ,Meghadhamman ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...