×

ராமர் கோயில் பணி நிறைவடைவது ராம ராஜ்ஜியத்துக்கான அறிகுறி: சட்டீஸ்கரில் யோகி ஆதித்யநாத் பேச்சு

சுக்மா: ராமர் கோயில் கட்டும் பணி நிறைவடைவது ராமராஜ்ஜியம் தொடங்கி விட்டதற்கான அறிகுறியாகும் என்றும் ஜாதி, மத அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படாது என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி கூறினார்.  சட்டீஸ்கரில் முதல் கட்ட பேரவை தேர்தல் நடக்கும் கோன்டா நகரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில்,‘‘ ஆட்சியில் ஜாதி மற்றும் மத அடிப்படையில் பாரபட்சங்கள் இல்லாமல் இருப்பதுதான் ராமராஜ்ஜியம் என்று அழைக்கப்படுகிறது. திட்டங்களின் பயன்கள் பழங்குடியினர்,ஏழைகள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் சென்றடையும்.

பாதுகாப்பு,வசதிகள் மற்றும் வளங்களின் உரிமைகள் அனைவருக்கும் கிடைக்கும். அதுதான் ராமராஜ்ஜியம். ராமர் கோயில் கட்டுமான பணிகள் ஜனவரி மாதத்தில் முடிவடையும். அது ராம ராஜ்ஜியம் தொடங்கிவிட்டதற்கான அறிகுறி. இந்த மாநிலம் ராமரின் தாய் வழி இடம் என்பதால் உபியை விட சட்டீஸ்கர் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்’’ என்றார். மேலும், காவர்தா என்னுமிடத்தில் அவர் பேசும்போது,‘‘பாஜ ஆட்சி அமைத்தால் லவ் ஜிகாத்,மாடுகளை கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post ராமர் கோயில் பணி நிறைவடைவது ராம ராஜ்ஜியத்துக்கான அறிகுறி: சட்டீஸ்கரில் யோகி ஆதித்யநாத் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Rama ,Yogi Adityanath ,Chhattisgarh ,Sukma ,Ram Temple ,
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்