×

டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் பைனலில் பெகுலா

காங்கூன்: டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, அமெரிக்க வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலா தகுதி பெற்றார்.அரையிறுதியில் சக வீராங்கனை கோகோ காஃப் உடன் மோதிய பெகுலா அதிரடியாக விளையாடி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. அரினா சபலென்கா – இகா ஸ்வியாடெக் இடையே நடைபெறும் அரையிறுதியில் வெற்றி பெறும் வீராங்கனையுடன், இறுதிப் போட்டியில் பெகுலா மோதுவார். ஆண்டு இறுதி தரவரிசையில் டாப் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகள் மட்டுமே இந்த தொடரில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

The post டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் பைனலில் பெகுலா appeared first on Dinakaran.

Tags : Pegula ,WDA Finals ,Cancun ,Jessica Pegula ,WDA Finals tennis ,WTA Finals ,Dinakaran ,
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஜெஸிகா பெகுலா