×

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 49 சதம் விளாசி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி

கொல்கத்தா: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 49 சதம் விளாசி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி. தனது சாதனையை சமன் செய்த விராட் கோலியை சச்சின் டெண்டுல்கர் வாழ்த்தினர்.

நடப்பு உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் 37வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். ஆரம்பம் முதலே ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் பொறுமையாக விளையாடினார்.

அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ரோஹித் சர்மா 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதனை அடுத்து விராட் கோலி களமிறங்கினார். இதையடுத்து சுப்மன் கில் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபுறம் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.

விராட் கோலி மற்றும் ஸ்ரேயா செய்யர் இருவரும் இணைந்து விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இதன் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் களமிறங்கி சொற்ப ரன்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் சொற்ப ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் அதிரடி காட்டி விளையாடிக் கொண்டிருந்த விராட் கோலி தனது 49 ஒருநாள் சதம் விளாசி சச்சினின் சாதனையை சமன் செய்து அசத்தினார். தனது சாதனையை சமன் செய்த விராட் கோலியை சச்சின் டெண்டுல்கர் வாழ்த்தினர்.

இறுதியில் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 326 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 101* ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும், ரோஹித் சர்மா 40 ரன்களும் எடுத்துள்ளனர்.

The post சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 49 சதம் விளாசி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி appeared first on Dinakaran.

Tags : Virat Kohli ,Vlasi Sachin Tendulkar ,Kolkata ,Dinakaran ,
× RELATED குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 9...