×

வேக கட்டுப்பாடு அமலுக்கு வந்த பிறகு சென்னையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 120 வழக்குகள் பதிவு: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர்

சென்னை: சென்னையில் வேக கட்டுப்பாட்டு அளவு நேற்று முதல் அமலுக்கு வந்தது, இதையடுத்து வேக கட்டுப்பாடு அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று காலை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் கூறியதாவது: சென்னையில் இலகு ரக வாகனங்களின் வேக அளவு 60 கி.மீட்டரும், கன ரக வாகனங்களுக்கு 50 கி.மீட்டரும், இருசக்கர வாகனங்களுக்கு 50 கி.மீட்டரும், ஆட்டோவுக்கு 40 கி.மீட்டரும் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் 30 கி.மீட்டராக வேக அளவு நேற்று முதல் நடைமுறையில் உள்ளது. சென்னையில் வேக கட்டுப்பாட்டு அளவு நடைமுறைக்கு வந்த பிறகு வாகனங்களில் அதிகளவில் வேகமாக சென்றவர்கள் மீது 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நம்பிடம் வேக கட்டுப்பாட்டு கருவி இருக்கிறது. அந்த கருவியில் வேகமாக செல்பவர்களை கண்டறியமுடியும்.

புதிய வேக கட்டுப்பாடு நடைமுறைப்படுத்திய பிறகு 120 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். அதில், அதிகளவில் இருச்சக்கர வாகனம் மற்றும் கார்கள் தான் வேக கட்டுப்பாட்டை மீறியுள்ளனர். அதில் 5 நான்கு சக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். மற்ற எல்லா வழக்குகளும் இரு சக்கர வாகனங்கள் மீது தான் நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம். அண்ணாசாலையில் ஒரு சில இடங்களில் ‘யூ’ வலைவுகளை தடுப்புகள் அமைத்து ஒரு வழிப்பாதையாக மாநகர போக்குவரத்து காவல்துறை மாற்றியுள்ளது. இது குறித்து நாங்கள் டிவிட்டரில் கருத்துக்கள் கேட்டோம். அப்போது 70 சதவீதம் பேர் தங்களது கருத்துகளை தெரிவித்து இருந்தார்கள். அதில் ரொம்ப நல்லா இருக்கிறது என்று 32 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருந்தனர்.

30சதவீதம் பேர் எங்களுக்கு இது பிடிக்கவில்லை என்று கருத்து தெரிவித்திருந்தனர். நாங்கள் கூகுள் வைத்து ஆய்வு செய்த போது, அண்ணாசாலை, ஈவெரா சாலை, ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலைகள் எல்லாம் ஆய்வு செய்தோம். முதற்கட்டமாக அண்ணசாலையை தான் நாங்கள் ஆய்வு செய்தோம். எந்த சிக்னல்களில் போக்குவரத்து மெதுவாக செல்கிறது என்று பார்த்த போது, நந்தனம், எஸ்ஐடி, தேனாம்பேட்டை ஆகிய சிக்னல்களை கடந்து செல்வதற்கு 15 நிமிடங்கள் ஆகிறது. அது குறித்து ஆய்வு செய்த போது, தான் சிக்னல்களின் நேரம் கணக்கிட்டு ஸ்பென்சர் சிக்னல்களில் ஆய்வு செய்த போது, அது நன்றாக இருந்தது. அதன் பிறகு நாங்கள் நந்தனம் சிக்னலில் நடைமுறைப்படுத்தினோம்.

இந்த நடைமுறையால் தற்போது எழும்பூரில் இருந்து விமான நிலையம் செல்ல 40 நிமிடங்களில் செல்வதாக டிவிட்டரில் சில தெரிவித்துள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை புகைப்படம் எடுத்து தானே வழக்கு பதிவு செய்யும் கேமரா அண்ணாநகரில் உள்ளது. தற்போது அண்ணாசாலையில் வந்து ஜெமினி மேம்பாலம், ஈகா சிக்னல், வட சென்னையில் வருகிறது. இந்த 3 இடங்களில் தற்போது பணிகள் நடந்து வருகிறது. ஒரு வாரத்தில் பணிகள் முடிந்த உடன் நடைமுறைப்படுத்தப்படும்.

இதுதவிர ஐடிஎம்எஸ் என்ற திட்டம் வருகிறது. அந்த திட்டத்தை எல்அன்ட் டி எடுத்து இருக்காங்க அவர்கள் சென்னை முழுவதும் மொத்தம் 177 சந்திப்புகளில் இந்த கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொதுவாக சாலை விதிகளை மீறுபவர்களை காவல்துறையே சம்பந்தப்பட்ட நபர்களை அடிக்க கூடாது. பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தெரிவித்தார்.

The post வேக கட்டுப்பாடு அமலுக்கு வந்த பிறகு சென்னையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 120 வழக்குகள் பதிவு: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Additional Transport Commissioner ,Sudhakar ,Additional Traffic Commissioner ,Dinakaran ,
× RELATED ரூ.4.8 கோடி பறிமுதல்: பாஜக வேட்பாளர் மீது வழக்கு