×

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

கோவை: மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் ராட்சத பாறை விழுந்ததால் ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 184 பயணிகளுடன் நேற்று காலை 7 மணிக்கு மலை ரயில் புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில், கல்லாறு – அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையில் கனமழையால் நேற்று காலை மண் மற்றும் ராட்சத பாறைகள் விழுந்ததால் தண்டவாளம் சேதமானது.

கல்லாறு – அடர்லி இடையே 5 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து புறப்பட தயாராக இருந்த மலை ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு கட்டணத்தொகை முழுமையாக திருப்பி வழங்கப்பட்டது. மலை ரயிலில் பயணிக்க ஆர்வத்தோடு வந்தவர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், மழை நிலவரத்தைப் பொறுத்து செவ்வாய் கிழமை காலை 7.10 மணி முதல் மலை ரயில் போக்குவரத்து இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Metuppalayam ,Udagai Malai train service ,Goa ,Udagai Hill train service ,Udagai Malai Railway Service ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து!