×

நிலப்பிரச்னையில் தகராறு விவசாயிகள் 2 பேர் மீது வழக்கு

 

போடி, நவ. 5: போடியில் உள்ள ஜே.கே.பட்டி கம்பன் தெருவைச் சேர்ந்தவர் பாபு. இவருக்கு சொந்தமான தோட்டம் ரெங்கநாதபுரம் அருகே ராணி மங்கம்மாள் சாலையில் உள்ளது. இவரது தோட்டத்தின் அருகே, போடி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. நிலப்பிரச்னை தொடர்பாக இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று தனது தோட்டத்தில் பாபு வேலை செய்து கொண்டிருந்தார்.

அங்கு வந்த ரவிச்சந்திரன், பாபுவை அவதூறாக பேசி, கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாபு, உன்னையும், உன் அம்மாவையும் ஆட்களை வைத்து கொலை செய்து விடுவேன் என ரவிச்சந்திரனை மிரட்டியுள்ளார். இதனால் இருவரும் தனித்தனியே போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் எஸ்.ஐ. இதிரிஸ்கான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post நிலப்பிரச்னையில் தகராறு விவசாயிகள் 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Babu ,JK Patty Kampan Street ,Renkanathapuram ,Dinakaran ,
× RELATED போடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நள்ளிரவு முதல் சாரல் மழை