×

விவசாயியின் மாட்டை திருடி சந்தையில் விற்றவர் கைது

 

மதுக்கரை, நவ.5: கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியை சேர்ந்த சின்னப்பன் என்பவரின் மகன் ஏகமூர்த்தி (75). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தனது 3 கறவை மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்று விட்டு மீண்டும் வீட்டு வாசலில் கட்டி விட்டு தூங்கச் சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கறவை மாட்டை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடியும் கறவை மாடு கிடைக்கவில்லை.
இதையடுத்து ஏகமூர்த்தி செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு சென்ற போலீசார் விற்பனைக்கு வந்திருந்த மாடுகளை சோதனை செய்தனர் அப்போது ஏகமூர்த்தியின் மாடு அங்கிருப்பது தெரியவந்தது. பின்னர் மாட்டை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்தவர் யார் என்று விசாரித்த போது, ஒத்தக்கால்மண்டபத்தை சேர்ந்த வீரையன் என்பவரின் மகன் உதயகுமார் (45) என்பதும் ஏகமூர்த்தியின் மாட்டை ஆட்டோவில் ஏற்றி திருடிச்சென்று பொள்ளாச்சி சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செட்டிபாளையம் போலீசார் உதயகுமாரை கைது செய்தனர்.

The post விவசாயியின் மாட்டை திருடி சந்தையில் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Madhukarai ,Ekamurthy ,Chinnappan ,Othakkal Mandapam, Coimbatore ,
× RELATED குனியமுத்தூரில் சிறுத்தை குறித்த வதந்தி பரப்பினால் நடவடிக்கை