×

வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் ஆய்வு

திருப்பூர், நவ.5: புதிய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், இறந்தவர்களை பட்டியலில் இணைக்கவும், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

திருப்பூர் வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட 39 பூத்களில் நடைபெற்ற முகாமில் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான தினேஷ்குமார் மற்றும் வடக்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மாநில இலக்கிய அணி துணை செயலாளருமான திராவிட மணி ஆகியோர் ஆய்வு செய்தனர். முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர். இதில் மண்டல தலைவர் கோவிந்தராஜ், பகுதி செயலாளர்கள் ராமதாஸ், ஜோதி, மின்னல் நாகராஜ், போலார் சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்