×

தக்கலை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 42 கி. ஓலை பட்டாசு பறிமுதல்: தம்பதி மீது வழக்கு

 

நாகர்கோவில், நவ.5: தக்கலை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 42 கிலோ பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தீபாவளி பண்டிகை வருகிற 12ம்தேதி கொண்டாடப்படுகிறது. விழாவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் புதிய ஆடைகள், பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். பட்டாசு கடைகளும் புதிது, புதிதாக திறக்கப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்தில் சுமார் 100 பட்டாசு கடைகள் தற்காலிக அனுமதி பெற்றுள்ளன. பட்டாசுகள் விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக அனுமதியின்றி பட்டாசுகளை வீடுகள், கட்டிடங்களில் பதுக்கி வைக்க கூடாது.

சீன பட்டாசுகள் விற்பனை செய்ய கூடாது. தயாரிப்பு கம்பெனியின் முழு முகவரி இல்லாமல் பட்டாசுகள் விற்பனை செய்ய கூடாது. சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்ய கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. குமரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனையை கண்காணிக்க கலெக்டர் மேற்பார்வையில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில், தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் ஒரு வீட்டில் பட்டாசு தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை தக்கலை இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். இதில் பரைக்கோடு பாட்டவிளாகம் பகுதியை சேர்ந்த மகேஷ் (49) என்பவரின் வீட்டில் ஓலை பட்டாசுகள் தயாரித்து பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.  இதையடுத்து அங்கிருந்த பட்டாசு மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 42 கிலோ பட்டாசுகள் இருந்தன. அதை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக மகேஷ் மற்றும் அவரது மனைவி ராதா (44) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post தக்கலை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 42 கி. ஓலை பட்டாசு பறிமுதல்: தம்பதி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Takkala ,Nagercoil ,Thakala ,Diwali ,Dinakaran ,
× RELATED வட மாநில தொழிலாளி கொலையில் நண்பர் மீது...