×

அம்மையார்குப்பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் விநியோகம்: நெடுஞ்சாலை துறை நடவடிக்கை

 

பள்ளிப்பட்டு, நவ. 5: அம்மையார்குப்பத்தில் மாநில நெடுஞ்சாலையில் வரும் 15ம்தேதி ஆக்கிரமிப்புகள் அகற்ற ஏதுவாக, நெடுஞ்சாலை துறை சார்பில் நோடீஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் மிகப்பெரிய ஊராட்சியாகும். இதனை பேரூராட்சியாக தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி அம்மையார்குப்பம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், தினமும் அம்மையார்குப்பம் வந்து செல்கின்றனர்.

குறுகிய சாலையில் வாகனங்கள் வந்து செல்ல வேண்டிய நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல ஏற்பட்டு வாகன ஒட்டிகள், பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். பேருந்துகள் உட்பட கனரக வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. அம்மையார்குப்பம் – ஆவலகுண்ட மாவட்ட நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்நிலையில், பள்ளிப்பட்டு உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர், வருவாய் துறையினர் உதவியுடன் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்து சாலை விரிவுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சாலை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு, நெடுஞ்சாலை துறை பள்ளிப்பட்டு உட்கோட்ட உதவி பொறியாளர் சுரேஷ் சார்பில், நோடீஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

வரும் நவம்பர் 15ம்தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாக ஒலிபெருக்கி மூலம் ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

The post அம்மையார்குப்பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் விநியோகம்: நெடுஞ்சாலை துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Ammaiyarkuppam ,Highways Department ,Highway department ,Dinakaran ,
× RELATED ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்