×

கல்லாறு-அடர்லி இடையே ராட்சத பாறை விழுந்ததால் ஊட்டி மலை ரயில் ரத்து

மேட்டுப்பாளையம்: தண்டவாளத்தில் ராட்சத பாறை விழுந்ததால் ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 184 பயணிகளுடன் நேற்று காலை 7 மணிக்கு மலை ரயில் புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில், கல்லாறு – அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையில் கனமழையால் நேற்று காலை மண் மற்றும் ராட்சத பாறைகள் விழுந்ததால் தண்டவாளம் சேதமானது.

கல்லாறு- அடர்லி இடையே 5 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து புறப்பட தயாராக இருந்த மலை ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு கட்டணத்தொகை முழுமையாக திருப்பி வழங்கப்பட்டது. மலை ரயிலில் பயணிக்க ஆர்வத்தோடு வந்தவர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர்.

 

The post கல்லாறு-அடர்லி இடையே ராட்சத பாறை விழுந்ததால் ஊட்டி மலை ரயில் ரத்து appeared first on Dinakaran.

Tags : FOODY MOUNTAIN ,KALLURU-ATARLI ,Matuppalayam ,Ooty ,Goa ,Ooty 184 ,Ooty mountain ,Kalluru-Attarli ,
× RELATED ஊட்டி மலை ரயில் மோதி ஒருவர் சாவு