×

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: சென்னை, அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நிதித்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மின்சாரத்துறை மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, அனைத்து இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக்கூட்டத்தில், ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களான கோவை, நீலகிரி, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்த மாவட்ட தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடனும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வினை அமைச்சர் தங்கம் தென்னரசு மேற்கொண்டார். கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்துள்ள உத்தரவுகள்:

* மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் உதவி செயற்பொறியாளர்களை நியமித்து பணியாற்றிட வேண்டும்.

* தமிழ்நாட்டில் ஒரு குழுவிற்கு 15 பணியாளார்கள் வீதம், மொத்தம் 5,000 பேர் 24 மணி நேரமும் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை 24 மணி நேர மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தின் தொடர்பு எண்ணான 94987 94987 வாயிலாகவும் மற்றும் அனைத்து மின்பகிர்மான வட்ட மின்தடை நீக்கம் மையம் வாயிலாகவும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister Thangam ,South ,Chennai ,Power ,Minister ,Thangam ,Tamil ,Nadu ,Tamil Nadu Power Board ,Annasalai, Chennai ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...