திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை தளம் உள்ளது. இந்த கடற்படை தளத்தை ஒட்டி ஐஎன்எஸ் கருட் என்ற கடற்படை விமான நிலையம் உள்ளது.இங்கு கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். நேற்று மதியம் 2 மணியளவில் தேஜஸ் என்ற ஹெலிகாப்டர் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராவிதமாக ஹெலிகாப்டர் பிளேடுகள் அங்கு ஓடு பாதையில் நின்று கொண்டிருந்த யோகீந்தர் என்ற கடற்படை வீரரின் மேல் பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
The post ஹெலிகாப்டர் பிளேடு வெட்டி கடற்படை வீரர் மரணம் appeared first on Dinakaran.