×

லீக் சுற்றில் ‘நாக்-அவுட்’ ஒத்திகை! இந்தியா – தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை: முதலிடம் யாருக்கு?

கொல்கத்தா: ஐசிசி உலக கோப்பை தொடரின் 37வது லீக் ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கும் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. இதுவரை விளையாடிய 7 லீக் ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வென்று அசத்தியுள்ள இந்தியா, 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறையிலும் ஒருங்கிணைந்து விளையாடி அமர்க்களப்படுத்தி வரும் இந்திய அணி, கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக கணிக்கப்படுகிறது.

தென் ஆப்ரிக்காவும் ஏறக்குறைய அரையிறுதியை உறுதி செய்துவிட்டது என்றாலும், மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருப்பது மற்றும் மொத்த ரன் ரேட்டில் கவனம் போன்ற தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்க வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுகிறது. இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியா அதற்கு வாய்ப்பு அளிக்குமா என்பது கேள்விக்குறிதான். புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் இருக்கும் இந்த அணிகள் மோதும் இன்றைய ஆட்டம், ஒரு ‘நாக்-அவுட்’ ஒத்திகையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

* இந்தியா: ரோகித் (கேப்டன்), கில், கேஎல் ராகுல், இஷான், கோஹ்லி, ஸ்ரேயாஸ், சூரியகுமார், ஜடேஜா, அஷ்வின், ஷர்துல், பும்ரா, குல்தீப், ஷமி, சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

* தென் ஆப்ரிக்கா: பவுமா (கேப்டன்), டி காக், கிளாஸன், ஹெண்ட்ரிக்ஸ், மார்க்ரம், மில்லர், வான்டெர் டுசன், யான்சன், பெலுக்வாயோ, கோட்ஸீ, மகராஜ், என்ஜிடி, ரபாடா, ஷம்சி, லிஸாட் வில்லியம்ஸ்.

* இனவெறி காரணமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட பிறகு தென் ஆப்ரிக்காவுடன் முதலில் (ஒருநாள்) விளையாடிய நாடு இந்தியா தான்.

* இரு அணிகளும் இதுவரை 90 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளதில் தென் ஆப்ரிக்கா 50-37 என முன்னிலை வகிக்கிறது (3 ஆட்டங்கள் ரத்து).

* இந்தியாவில் விளையாடிய 31 ஆட்டங்களில், இந்தியா 17-14 என முன்னிலையில் உள்ளது.

* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் தென் ஆப்ரிக்கா 3-2 என சற்றே முந்தி இருக்கிறது.

* உலக கோப்பையில் 5 முறை மோதியதிலும் தென் ஆப்ரிக்காவின் கையே 3-2 என ஓங்கியுள்ளது.

* உலக கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்தியா 307 ரன், இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்ரிக்கா 300 ரன்.

* ஈடன் கார்டனில் நடந்த 33 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி 19லும், சேஸ் செய்த அணி 13லும் வென்றுள்ளன (2 ஆட்டங்கள் ரத்து).

The post லீக் சுற்றில் ‘நாக்-அவுட்’ ஒத்திகை! இந்தியா – தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை: முதலிடம் யாருக்கு? appeared first on Dinakaran.

Tags : India ,South Africa Test ,Kolkata ,ICC World Cup ,South Africa ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை