×

ஆந்திராவில் 15ம் தேதி முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு


திருமலை: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் வெலகம்புடியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் டென்னிஸ் வீராங்கனை மைனேனி சாகேத்துக்கு குரூப்-1 பணி, அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டி.ஏ. வழங்க ஒப்புதல், மாநிலம் முழுவதும் வரும் 15ம் தேதி முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தில் தொழிற்சாலைகள், 6,790 உயர்நிலைப்பள்ளிகளில் திறன் மேம்பாட்டு மையம்,

கர்னூலில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்துக்கு மேலும் 100 ஏக்கர் ஒதுக்கீடு, போலவரம் அணை கட்டுவதற்காக நிலம் வழங்கியவர்களுக்காக அரசு வழங்கிய வீடுகள் மற்றும் மனைகளை பதிவு செய்வதற்கான முத்திரை கட்டணம், பதிவு கட்டணம் மற்றும் பயனர் கட்டணம் ஆகியவற்றில் விலக்கு, கர்னூல் மாவட்டத்தில் 800 மெகாவாட் காற்றாலை மின் நிலையம், நந்தியாலா மற்றும் கடப்பா மாவட்டங்களில் 902 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் நிலையம் அமைக்க 5,400 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்தகவலை செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்தார்.

The post ஆந்திராவில் 15ம் தேதி முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Andhra ,Thirumalai ,Chief Minister ,Jegan Mohan ,Welagampudi, AP State Guntur District ,Dinakaran ,
× RELATED ஆபாச வீடியோ பிரச்னை விஸ்வரூபம்...