×

கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

கோவை: கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செப். 2022-ல் இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்பிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலாஜி உத்தம ராமசாமி மீது பீளமேடு போலீஸ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தது. பட்டியலினம் – பழங்குடியின மக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

The post கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,BJP ,President Balaji Uttama Ramasamy ,President ,Balaji Uttama Ramasamy ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...