×

பாலக்காடு அருகே கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து மறியல்

பாலக்காடு : பாலக்காடு அருகே கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அடுத்த ஆனைக்கரை, பட்டித்தரை, கப்பூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. அளவிற்கு அதிகமான பாரம் ஏற்றிய லாரிகள் சாலைகளில் கடந்து செல்வதால் தூசி படர்ந்து சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. சாலைகளில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. மேலும், கல்குவாரிகளில் பாறைகள் உடைப்பதற்கு வெடிவெடிப்பதால் சுற்றுப்புறப்பகுதிகளிலுள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர் விரிசல் ஏற்பட்டுள்ளது.

குடிநீர் மேல்நிலைத்தொட்டி அதிர்வுக்காரணமாக எந்த நேரத்திலும் இடிந்து கீழே வீழும் அபாயம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகள் இந்த காரணங்களால் தடைபடுத்தப்பட்டுள்ள கல்குவாரி மீண்டும் 2022ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கல்குவாரி செயல்பாடுகளை நிறுத்த வேண்டும். லாரிகளில் அபாயம் விளைவிக்கக்கூடிய வேகதையில் செல்கின்ற லாரிகளை தடைப்படுத்த வேண்டும். அதிகபாரம் ஏற்றி செல்கின்ற லாரிகளால் ஏற்பட்ட சாலைகளையும், குடிநீர் குழாய்களையும் சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்து நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பள்ளிவாசலில் அரபி படனத்திற்கு செல்கின்ற குழந்தைகள் லாரிகளின் வேகத்தை கண்டு பீதியடைந்துள்ளனர். இந்த கல்குவாரி செயல்பாட்டால் குழந்தைகளின் படிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திருத்தாலா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஊர்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கல்குவாரி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் தலைமையில் உரிமையாளர் மற்றும் ஊர் மக்களின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது என போலீசார் தெரிவித்தனர். தற்போது கல்குவாரிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

The post பாலக்காடு அருகே கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து மறியல் appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Kalguari ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி கல்குவாரி வெடிவிபத்து:...