×

சென்னையில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன: கே.என்.நேரு பேட்டி

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் கனமழை பெய்தாலும் எந்த இடத்திலும் மழைநீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் மழைநீர் தேங்கவில்லை; தேங்கினாலும் ஒரு மணி நேரத்தில் நீர் அகற்றப்படும். கடந்த 2 நாட்களில் 11 செ.மீ மழை பதிவாகி இருந்தாலும் கூட தேங்கிய மழை நீர் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.

20 செ.மீ. மழை பெய்தாலும் ஒரு மணி நேரத்தில் மழைநீர் வடியும் நிலையில் நடவடிக்கை. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 98% அளவுக்கு நிறைவடைந்துள்ளன. மழைநீர் தேங்கினாலும் அதை உடனே அகற்றுவதற்கான 503 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் குடிநீர் பிரச்சனை இருக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் உள்ள 16 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை எனவும் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன: கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,K. N. ,Nehru ,Minister ,K. N. Nehru ,Chennai Municipal Office ,K. N. Neru ,
× RELATED பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி...