×

குலுங்கிய கட்டிடங்கள்..கலங்கிய மக்கள்: நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 132 ஆக உயர்வு

நேபாளம்: நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 69 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நிலடுக்கம் முதற்கட்ட அளவில் 5.6 ரிக்டர் பதிவானதாகவும், 11 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்பின் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ருகும் மாவட்டத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. காயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜாகர்கோட் மாவட்டத்தில் 34 பேர் உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்னர்.

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் மீட்புப்பணியில தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பல இடங்களில நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட இடத்தை நெருங்க முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் நேபாளத்தில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர்.

The post குலுங்கிய கட்டிடங்கள்..கலங்கிய மக்கள்: நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 132 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Nepal ,northwest of ,Dinakaran ,
× RELATED சர்வதேச டி20ல் அதிவேக சதம்: நிகோல் லாப்டி உலக சாதனை