×

நிலக்கோட்டையில் திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

நிலக்கோட்டை, நவ. 4: நிலக்கோட்டையில் திமுக மாநில துணை பொது செயலாளரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியின் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழநி எம்எல்ஏவுமான ஐபி.செந்தில்குமாரின் வழிகாட்டுதலின்படி வாக்குச்சாவடி முகவர் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளரும், தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகாலபாண்டியன், நகர செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை முன்னிலை வகித்தனர்.

தெற்கு ஒன்றிய துணை செயலாளர் வெள்ளிமலை வரவேற்றார். கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் புதிய இளைஞர்களை கட்சியில் சேர்ப்பது, முகவர்களின் பணியினை தீவரப்படுத்துவது, தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் முகவர்கள் பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், நகர துணை செயலாளர் கதிரேசன், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் நெடுமாறன், பொருளாளர் அறிவு (எ) சின்னமாயன் மற்றும் இளைஞரணி, மாணவரணி பொறுப்பாளர்கள், முகவர்கள் என பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்துராஜா நன்றி கூறினார்.

The post நிலக்கோட்டையில் திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Nilakottai ,State ,Deputy General Secretary ,Rural Development Minister ,I.Periyaswamy ,Dinakaran ,
× RELATED சாலைகளில் ஆணியை புதைக்கிறது பாஜ அரசு...