×

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு பணியில் காங்கிரசார் தீவிரமாக ஈடுபட வேண்டும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ வேண்டுகோள்

கருங்கல் , நவ.4: ராஜேஷ்குமார் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1.1.2024 தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்து கொள்ளும் வகையில் 2023 அக்டோபர் 27ம் தேதி முதல் 2023 டிசம்பர் 9ம் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மற்றும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதுதவி 4ம் தேதி (இன்று), 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 18ம் தேதி (சனிக்கிழமை), 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாட்களில் வாக்குச் சாவடியில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் 18 வயது நிறைவடைந்த நபர்கள் அனைவரும் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம்-6 வழங்கியும், ஏற்கனவே வாக்காளராக பதிவு செய்துள்ளவர்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் அல்லது வேறு தொகுதிக்கு மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கு படிவம்-8 பூர்த்தி செய்தும், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட படிவம் 6-பி பூர்த்தி செய்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம். ஆகவே அந்தந்த வாக்குச்சாவடிகளில் நான்கு நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாம்களில் குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியின் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள 18 வயது நிரம்பியவர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காதோர் அனைவரையும் அடையாளம் கண்டு, பட்டியலில் சேர்க்க தீவிரமாக ஈடுபட வேண்டும்.

The post வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு பணியில் காங்கிரசார் தீவிரமாக ஈடுபட வேண்டும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Rajesh Kumar ,MP. L. ,Karangal ,Rajesh Kumar MLA ,Election Commission of India ,Congress ,Rajesh Kumar M. L. ,Dinakaran ,
× RELATED சென்னையில் அமைக்கப்படுவதை போன்று...