×

பண்பாட்டு போட்டியில் நெடுவயல் பள்ளி மாணவர்கள் சாதனை

கடையநல்லூர், நவ.4: பண்பொழியில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் நடந்த பண்பாட்டுப்போட்டியில் நெடுவயல்  சிவசைலநாத நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். பண்பொழி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கதை சொல்லுதல், ஒப்புவித்தல், பாடல், திருக்குறள், ஓவியம், வினாடி வினா போன்ற பல்வேறு வகையான போட்டிகள் நடந்தது. இதில் நெடுவயல்  சிவசைலநாத நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 12 பேர் முதல் பரிசும், 10 பேர் இரண்டாவது பரிசும், 4 பேர் மூன்றாவது பரிசும், 4 பேர் ஐந்தாவது பரிசும் என மொத்தமாக 30 பரிசுகள் பெற்று கலந்து கொண்ட பள்ளிகளில் அதிக பரிசுகள் இப்பள்ளி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் அதற்கு பயிற்சி அளித்த தலைமைஆசிரியை சுதாநந்தினி, ஆசிரியர்கள் லதா, சாந்தி, கோலம்மாள், சா.லதா, சே.சாந்தி, சுப்புலட்சுமி, எலிசபெத், பிரபாகரன் ஆகிய ஆசிரியர், ஆசிரியைகளை பள்ளியின் நிர்வாகி கணேஷ்ராம், பள்ளியின் செயலர் தம்புசாமி, பள்ளிக்குழு உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர் பாராட்டினர்.

The post பண்பாட்டு போட்டியில் நெடுவயல் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Nedavail school ,Kadiyanallur ,Neduvayal Sivasailanatha Secondary School ,Vivekananda Kendra ,Dinakaran ,
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...