×

டூவீலரில் தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் பலி

 

உத்தமபாளையம், நவ. 4: உத்தமபாளையம் பி.டி.ஆர் காலனியை சேர்ந்தவர் முபாரக் அலி (42). ஆட்டோ டிரைவர். தினமும் காலையில் பணிக்கு சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் கடந்த அக்.31ம் தேதி முபாரக் அலி டூவீலரில் கோம்பைக்கு சென்றார். மீண்டும் ஊருக்கு செல்ல உத்தமபாளையம் – கோம்பை ரோட்டில் உள்ள ஹாஜி கருத்தராவுத்தர கல்லூரி அருகே வந்தபோது தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்தவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலரில் தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Uttamapalayam ,Mubarak Ali ,Uttamapalayam PDR Colony ,Dinakaran ,
× RELATED உத்தமபாளையம் அருகே 2 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு