×

வெம்பக்கோட்டையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

ஏழாயிரம்பண்ணை, நவ.4: வெம்பக்கோட்டையில் வாக்காளர் பதிவு சிறப்பு முகாம் மற்றும் வாக்காளராக பதிவு செய்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் முத்து பாண்டீஸ்வரி கொடியசைத்து துவக்கி வைத்தார். வெம்பக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் வாக்காளர் பதிவு விழிப்புணர்வு தொடர்பான வாசகங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

இந்த பேரணி பள்ளியில் தொடங்கி பேருந்து நிறுத்தம், மெயின் பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. பேரணி துவங்குவதற்கு முன்பாக வருவாய் வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் (ச.பா.தி) மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் ஆகியோரால் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் வெம்பக்கோட்டை தனி வட்டாட்சியர் கிருஷ்ணவேணி மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

The post வெம்பக்கோட்டையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Wembakota ,Thousand ,Students Awareness Rally ,Dinakaran ,
× RELATED சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக போர்மேன் கைது