×

கட்சி மேலிடம் தேர்வு செய்தால் கர்நாடகா முதல்வர் பதவியேற்க நான் தயார்: கார்கே மகன் பேட்டியால் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைந்து 6 மாதங்கள் கூட முழுமையாக முடிவடையாத நிலையில், அதற்குள்ளாக முதல்வர் மாற்றம் குறித்து பேசப்படுகிறது.இந்த நிலையில், நானே 5 ஆண்டுகள் முதல்வராக நீடிப்பேன் என்று நேற்று முன் தினம் சித்தராமையா பேசினார். இந்நிலையில் அமைச்சரும், தேசிய தலைவர் கார்கேவின் மகனுமான பிரியாங்க் கார்கே மைசூருவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

‘5 ஆண்டும் முதல்வராக நீடிப்பேன் என்று முதல்வர் சித்தராமையா கூறியது அவரது கருத்து. ஆனால் கருத்துகள் எல்லாம் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டவை அல்ல. முதல்வர் நியமனம் மற்றும் மாற்றம் குறித்தெல்லாம் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். கட்சி மேலிடம் என்னை முதல்வராக நியமித்தால், அந்த பதவியை ஏற்க நான் தயாராக இருக்கிறேன். ’ என்றார்.

* அதிர்ஷ்டம் இருந்தால் நானும் முதல்வராக முடியும்
அமைச்சர் பரமேஸ்வர் முதல்வராக வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டம் கை கொடுத்தால் அவர் துமகூரு மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பார் என்று அமைச்சர் கே.என்.ராஜண்ணா கூறியிருந்தார். இது குறித்து பரமேஸ்வர் கூறுகையில், அதிர்ஷ்ட காற்றுவீசினால் நான் முதல்வராக எதிர்காலத்தில் நிச்சயம் பதவியேற்பேன்’ என்றார்.

The post கட்சி மேலிடம் தேர்வு செய்தால் கர்நாடகா முதல்வர் பதவியேற்க நான் தயார்: கார்கே மகன் பேட்டியால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Chief Minister ,Kharke ,Bengaluru ,Congress ,Dinakaran ,
× RELATED கர்நாடக அரசை கவிழ்க்க கேரள கோயிலில்...