×

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளை பழுதுபார்க்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு

அம்பத்தூர்: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு கட்டிடங்களில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளின் பராமரிப்பு பணிகள், பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விடுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தினை கருத்தில் கொண்டு, விடுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள சிறப்பு நிதி ஒதுக்கீடு அவ்வப்போது அரசால் வழங்கப்படுகிறது.

அதன்படி 2023-24ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, விடுதிகளுக்கு சிறப்பு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக 34 மாவட்டங்களில் 129 விடுதிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் சிறப்பு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ள நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் விடுதிகளில் மின்சார பராமரிப்பு பணிகள், விடுதி கட்டிடங்களில் பழுது நீக்குதல், கதவு ஜன்னல்கள் சீரமைத்தல் போன்ற பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும். மாவட்டங்களில் விடுதிகளில் பழுதுபார்ப்பு பணிகள், பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்து துரிதப்படுத்திடவும் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளை பழுதுபார்க்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : backward ,Tamil ,Nadu ,Ambattur ,Backward, Overprivileged and Minority Welfare Department ,
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...