×

புறநகர் மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து

திருவொற்றியூர்: சென்னை சென்ட்ரல், அரக்கோணம் இடையே பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்காரணமாக இன்று இரவு மற்றும் நாளை காலை சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி இன்று சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10, 10.45 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில்கள், 10.20, 11.45 மணிக்கு ஆவடி செல்லும் ரயில்கள், 11.15 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரயில், 11.55 மணிக்கு பட்டாபிராம் சைடிங் செல்லும் ரயில், திருவள்ளூரில் இருந்து ஆவடிக்கு 10.10 மணிக்கு புறப்படும் ரயில் மற்றும் அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரலுக்கு 10.50 மணிக்கு புறப்படும் ரயில் ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் 10.35 மணிக்கு சென்ட்ரலில் இருந்து பட்டாபிராம் சைடிங் செல்லும் ரயில் மற்றும் 7.55 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் செல்லும் ரயில் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு ஈடாக சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். அதேபோல நாளை (நவ.5 தேதி) காலை 10 மணி வரை சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை – அரக்கோணம் வழித்தடத்தில் ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூர், திருத்தணி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மொத்தம் 58 ரயிலகள் முழுமையாக ரத்து செய்யபடுகிறது. ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு ஈடாக குறிப்பிட்ட இடைவேளிகளில் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் 38 பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post புறநகர் மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து appeared first on Dinakaran.

Tags : Suburban ,Chennai Central ,Arakkonam ,Pattabiram ,Ambattur ,Dinakaran ,
× RELATED அரக்கோணம் அருகே விடிய விடிய பரபரப்பு;...