×

துணை வேந்தர் தேடுதல் குழு விவகாரம் யுஜிசி மானியத்தை சென்னை பல்கலை பெறுகிறதா?: தமிழ்நாடு அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, தேடுதல் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிரதிநிதி இடம் பெறவில்லை எனக் கூறி தேடுதல் குழு நியமித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் பி.ஜெகன்னாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, ஆர்.கண்ணன் ஆஜராகினர். இதையடுத்து, நீதிபதிகள், சென்னை பல்கலைக்கழகம், யுஜிசி நிதியை பெறுகிறதா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, பல்கலைக்கழகம் நிதி பெறுகிறது என்றார்.அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ஆளுநரின் அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு 1967ல் சென்னை பல்கலைக்கழக திருத்தப்பட்ட விதிகளுக்கு முரணானது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிட்டார். இதையடுத்து, நிதி பெறுவதாக இருந்தால் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் துணைவேந்தர் நியமனத்துக்கு எதிராக வழக்கு தொடரக்கூடும். பல்கலைக்கழக மானியக் குழு நிதி சென்னை பல்கலைக்கழகத்தால் பெறப்படுகிறதா என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post துணை வேந்தர் தேடுதல் குழு விவகாரம் யுஜிசி மானியத்தை சென்னை பல்கலை பெறுகிறதா?: தமிழ்நாடு அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras University ,UGC ,Tamil Nadu government ,CHENNAI ,Chennai University ,Search ,Dinakaran ,
× RELATED ராகிங்கை தடுக்காவிட்டால் நடவடிக்கை...