×

குருவாயூர் கோவிலில் சந்திரசேகரன் யானை வழிபாடு: பக்தர்கள் கண்டு வியப்பு

பாலக்காடு: குருவாயூர் கோவிலில் வளர்ப்பு யானை சந்திரசேகரன் நேற்று தும்பிக்கை தூக்கி கிருஷ்ணரை வழிபட்டது. இதை கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் வியப்புடன் கண்டு மகிழ்ந்தனர். கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் யானைகள் வளர்க்கப்படுகிறது.

இதில், சந்திரசேகரன் என்ற யானை நேற்று மதியம் குருவாயூர் கோவில் முன்பு தும்பிக்கையை தூக்கி கிருஷ்ணரை தரிசனம் செய்தது. கடந்த சில ஆண்டுகளாக சந்திரசேகரன் யானை சிகிச்சை பெற்று வந்தது. தற்போது உடல்நலம் குணமாகி புத்துணர்வு பெற்று பாகன்கள் கட்டளைக்கு இணங்க செயல்பட்டு வருகிறது.

இதையடுத்து நேற்று கிருஷ்ணரை வழிப்பட வந்தது. அப்போது கோவில் தேவஸ்தான நிர்வாகி விநயன் நிவேத்ய யானைக்கு உணவு வழங்கினார். மேலும் யானை பாகன்களான பைஜூ, ரதீஷ், பினீஷ் ஆகியோருக்கு பொன்னாடை அணிந்து கவுரவித்தனர். யானை கிருஷ்ணரை வழிபட்டதை கோவிலுக்கு வந்து இருந்த பக்தர்கள் வியப்புடன் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

The post குருவாயூர் கோவிலில் சந்திரசேகரன் யானை வழிபாடு: பக்தர்கள் கண்டு வியப்பு appeared first on Dinakaran.

Tags : CHANDRASEKARAN ,GURUVAYUR TEMPLE ,Chandra Sekaran ,Guruvayur ,Krishna ,Dinakaran ,
× RELATED இலக்கை நிர்ணயித்து உழைத்தால் நினைத்த...