×

பட்டுப்புடவையும் அதன் பராமரிப்பும்!

நன்றி குங்குமம் தோழி

தீபாவளி என்றால் பட்டுச்சேலைக்குதான் வாங்குவதில் முதலிடம் கொடுப்போம். அப்படி வாங்கும் சேலையை பாதுகாப்பது எப்படி?

* பட்டுப் புடவைகளில் நிறைய ரகங்கள் இருந்தாலும் பெண்கள் அதிக அளவில் வாங்குவது காஞ்சி, ஆரணி, தர்மாவரம், கும்பகோணம், மைசூர், பனாரஸ் ஆகியவைகள்தான். அபூர்வா என்ற பட்டுப் புடவைகளும் வருகிறது.

* பட்டுச் சேலையை மஞ்சள் பையில் போட்டு வைத்தால் அப்படியே இருக்கும்.

* புடவைக்கு பால்ஸ் வைத்து தைத்தால் கால் கொலுசில் மாட்டி ஜரிகை பிரியாது.

* முந்தியில் நெட் வைத்து தைத்தால் கை வளையல், மோதிர கல்லில் ஜரிகை மாட்டாது.

* சேலை முந்தியில் குஞ்சலம் தைத்தால் அழகாக இருக்கும்.

* பட்டுப் புடவையை சோப்பு பவுடர் கொண்டு துவைக்கக்கூடாது. வெறும் தண்ணீரில் அலசினாலே போதும்.

* உடுத்திய பிறகு இரண்டு மணி நேரம் காற்றாட உலர வேண்டும். கையை வைத்து அழுத்தித் தேய்த்து மடித்தாலே அயர்ன் செய்தது போல் இருக்கும்.

* கறை பட்டு விட்டால் விபூதி கொண்டு தேய்த்து தண்ணீர் விட்டு அலசினாலே போதும்.

* எலுமிச்சைச் சாறு சேர்த்து அலசினால் சாயம் போகாது.

* டிரை வாஷ் செய்யலாம், அல்லது பூந்திக் கொட்டையை கொண்டு சோப்பு போல நுரை வரவைத்து அதில் கசக்கினாலே போதும்.

* இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்றி மடித்து வைக்கலாம்.

* புடவை கிழிந்து விட்டால் பெண் குழந்தைகளுக்கு பாவாடையாக மட்டுமில்லாமல் சுடிதார், லெஹங்கா போன்ற இன்றைய கால நவீன ஆடையாகவும் தைக்கலாம்.

* பட்டுப்புடவைகளை பூச்சி அரிக்காமல் இருக்க வசம்பை ஒரு துணியில் கட்டி உள்ளே பீரோவில் வைக்க வேண்டும்.

* புடவையை எக்காரணம் கொண்டும் அட்டைப் பெட்டியோடு வைக்கக் கூடாது.

* புடவைக்கு மேட்சிங் ப்ளவுஸ் தைக்கும் போது கலர் போகாத துணியாக வாங்கி தைக்க வேண்டும். இல்லையென்றால் வியர்வையில் சாயம் நனைந்து புடவையில் ஒட்டிவிடும்

– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

The post பட்டுப்புடவையும் அதன் பராமரிப்பும்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Diwali ,Dinakaran ,
× RELATED கறிவேப்பிலையின் மகத்துவம்