×

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவிப்பு..!!

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவை அளிப்பதாக ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவித்துள்ளார். தெலுங்கானாவில் நவம்பர் 30ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா 2021-ல் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா என்ற கட்சியை தொடங்கினார்.

கடந்த அக்டோபர் 12ம் தேதி, தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக ஷர்மிளாவின் கட்சி அறிவித்திருந்தது. பாளையார் தொகுதியில் போட்டியிடப் போவதாக ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவித்திருந்தார். அவரது தாயார் விஜயம்மா, செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது. பின்னர், தனது கட்சி 119 தொகுதிகளிலும் போட்டியிடும் என ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவித்திருந்த நிலையில் திடீரென போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், ஐதராபாத்தில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஒய்.எஸ்.ஷர்மிளா ஆலோசனை மேற்கொண்ட நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தா அவர்; தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவை அளிப்பதாக ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவித்துள்ளார். தெலுங்கானாவில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியை தோற்கடிக்கவே காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக ஒய்.எஸ்.ஷர்மிளா கூறியுள்ளார். சந்திரசேகர ராவ் அரசு மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுக்க வேண்டும்; ஓட்டுகள் பிளவு படாமல் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்; காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தாலும் போட்டியிட போவதில்லை. என்று அவர் தெரிவித்தார்.

The post தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Y. ,Congress party ,Telangana Assembly elections ,S. Sharmila ,Hyderabad ,Y. S. Sharmila ,
× RELATED பா.ஜவில் இணைந்த அசோக் சவானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு