சென்னை: அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை அரசியல் நாடகம் என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட 40 இடங்களிலும் சோதனை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அவருடைய மகன் கம்பன், குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியிலும் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் ஏ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. கோவையில் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினரான மீனா ஜெயக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை அரசியல் நாடகம் என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை அரசியல் நாடகம். மக்கள் பணி செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்று வருகிறது.
The post தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை அரசியல் நாடகம்: அமைச்சர் மனோ தங்கராஜ்! appeared first on Dinakaran.

