×

293 ரயில்கள் இயக்க அனுமதி வழக்கமான ரயில் சேவை ஏப்ரல் மாதம் துவங்கும்: சிறப்பு ரயிலில் மார்ச் 2வது வாரம் வரை முன்பதிவு; ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: தெற்கு ரயில்வேயில் 293 ரயில்கள் நிரந்தர எண்களில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து ரயில் மற்றும் பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. இந்நிலையில் சிறப்பு ரயில் நடைமுறையை கைவிட தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு அனைத்து மெயில் மற்றும் விரைவு ரயில்களும் சிறப்பு ரயில்களாகவும் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்கள் அனைத்தும் கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைப்போன்று மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே பலர் சிறப்பு ரயில்களில் மார்ச் 2-வது வாரம் வரை முன்பதிவு மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தியுள்ளதால் வழக்கமான ரயில் சேவை தற்போது துவங்கினால் இவர்களுக்கு கூடுதல் கட்டணம் திருப்பி அளிக்க வேண்டும். எனவே வழக்கமான ரயில் சேவை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெற்கு ரயில்வேயில் 293 ரயில்கள் நிரந்தர எண்கள் கொண்டு இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்….

The post 293 ரயில்கள் இயக்க அனுமதி வழக்கமான ரயில் சேவை ஏப்ரல் மாதம் துவங்கும்: சிறப்பு ரயிலில் மார்ச் 2வது வாரம் வரை முன்பதிவு; ரயில்வே அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Railway Board ,Southern Railways ,Dinakaran ,
× RELATED தெற்கு ரயில்வே முதன்மை தலைமை வணிக மேலாளர் பொறுப்பேற்பு