×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்: முன்பதிவு தொடங்கியது

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள் இடையூறு இன்றி பயணிக்க வசதியாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம்- நாகர்கோவில் -தாம்பரம் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது. நாகர்கோவில் – தாம்பரம் இடையே நவம்பர் 5, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில் (06012) நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இதேபோல் தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் நவம்பர் 6, 13, 20, 27 ஆகிய ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நான்கு நாட்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்படும். இதற்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தாம்பரத்தில் இருந்து தீபாவளிக்கு முன்னதாக மக்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு 5 நாட்கள் முன்னதாக நவம்பர் 6ம் தேதியும், தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 13ம் தேதியும் இயக்கப்பட உள்ளது. இது, தென் மாவட்ட பயணிகளை ஏமாற்றமடைய செய்துள்ளது.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்: முன்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Nagarkoil ,Diwali festival ,CHENNAI ,Nagercoil ,Diwali ,Tambaram-Nagarkoil ,
× RELATED தாம்பரம் அருகே மதுபோதையில் தாறுமாறாக...