×

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆன்லைனில் பட்டாசு விற்க தடை விதிக்க வேண்டும்: முதல்வரிடம் விக்கிரமராஜா நேரில் கோரிக்கை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று, வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என‌ வேண்டுகோள் விடுத்தனர். இந்த சந்திப்புக்கு பின் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புகளின் தலைமை கட்டிடம் வருகிற 19ம் தேதி திறக்கப்பட உள்ளது. அதற்கான அழைப்பிதழை முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்கினோம்.

தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் பட்டாசு விற்பனைக்கான உரிமம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது 4000 ஆயிரம் கடைகளுக்கு உரிமம் வழங்கி உள்ளது. இன்னும் 5000 கடைகளுக்கு உரிமம் வழங்கவில்லை. பட்டாசு விற்பனையை முறைப்படுத்துவது தொடர்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்களை ஒன்றிணைத்து பிப்ரவரியில் கூட்டம் நடத்தி இதை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். ஆன்லைனில் பட்டாசு விற்க தடை விதிக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளோம்.

The post தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆன்லைனில் பட்டாசு விற்க தடை விதிக்க வேண்டும்: முதல்வரிடம் விக்கிரமராஜா நேரில் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Diwali ,Wickramaraja ,Chief Minister ,Chennai ,M.K.Stalin ,Chennai Secretariat ,Federation of Merchants' Associations ,AM ,
× RELATED தேர்தல் விதிமுறை தளர்வு வணிகத்தை...