×

சில்லிபாயிண்ட்

* சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் இந்த அணிகள் இதுவரை 9 தடவை மோதியுள்ளன. அதில் ஆப்கான் 7 முறையும், நெதர்லாந்து 2 முறையும் வெற்றியை வசப்படுத்தி உள்ளன.

* இரண்டு அணிகளும் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களிலும் ஆப்கான் 4-1 என்ற கணக்கில் வலுவான நிலையில் இருக்கிறது.

* உலக கோப்பை தொடர்களில், இந்த 2 அணிகளும் முதல் முறையாக இன்று மோதுகின்றன.

* இன்று நெதர்லாந்து 2வது முறையாகவும், ஆப்கான் 4வது முறையாகவும் லக்னோ அரங்கில் விளையாட உள்ளன.

* லக்னோ அரங்கில் சில நாட்களுக்கு முன்பு முதல்முறையாக விளையாடிய நெதர்லாந்து, அதில் இலங்கையிடம் தோல்வியை தழுவியது.

* லக்னோவில் முதன் முதலில் ஆப்கான்-மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தான் நடந்தது. அந்த தொடரை மேற்கு இந்தியா 3-0என்ற கணக்கில் கைப்பற்றியது.

* இரு அணிகளும் லக்னோவில் முதல் வெற்றிக்காக இன்று களம் காண உள்ளன.

* லக்னோவில் இதுவரை நடந்த 8 ஒருநாள் ஆட்டங்களில் முதலில் பேட்டிங், 2வது பேட்டிங் செய்த அணிகள் தலா 4 வெற்றி தோல்விகளை சந்தித்திருக்கின்றன.

The post சில்லிபாயிண்ட் appeared first on Dinakaran.

Tags : Chillipoint ,Afghanistan ,Netherlands ,Dinakaran ,
× RELATED ஆப்கான் மசூதியில் திடீர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி