×

ரூ.1 லட்சம் கோடி கொள்ளையடித்த கே.சி.ஆர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

திருமலை: தெலங்கானா மாநிலம், காளேஸ்வரம் திட்டத்தில் கட்டப்பட்ட மேடிகட்டா அணையில் ஏற்பட்டுள்ள விரிசலை நேற்று ராகுல்காந்தி ஆய்வு செய்தார். பின்னர் நடைபெற்ற மகளிர் அதிகார மாநாட்டில் அவர் பேசியதாவது: ரூ.1 லட்சம் கோடி செலவில் கட்டப்பட்ட அணை 2 ஆண்டுகளில் சேதமடைந்துள்ளது.

பிஆர்எஸ் ஆட்சியில் இந்த ஒன்பதரை ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காளேஸ்வரம் திட்டம் பிஆர்எஸ், கேசிஆர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ஏடிஎம் போல மாறிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

The post ரூ.1 லட்சம் கோடி கொள்ளையடித்த கே.சி.ஆர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : K. C. R ,Rahul Gandhi ,THIRUMALI ,RAKULKANTHI ,MATIKATA DAM ,KALESWARAM PROJECT ,TELANGANA STATE ,Dinakaran ,
× RELATED உங்கள் வாக்கு ஜனநாயகத்தை...