×

எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு குறுந்தகவல் ஆப்பிள் நிறுவனத்துக்கு சைபர் பாதுகாப்பு பிரிவு நோட்டீஸ்

புதுடெல்லி: செல்போன் உளவு பார்க்க முயற்சிக்கப்படுவதாக எதிர்க்கட்சி எம்பிக்களின் ஐபோன்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய எச்சரிக்கை குறுந்தகவல் தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு சைபர் பாதுகாப்பு பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒன்றிய பாஜ அரசு எதிர்க்கட்சி எம்பிக்களின் செல்போனை ஒட்டு கேட்பதாக பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் நீண்டகாலமாக குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருளை ஒன்றிய அரசு வாங்கியுள்ளதாகவும், அதனை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களின் செல்போன் ஒட்டுகேட்கப்படுவதாகவும் பரபரப்பு புகார் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் காங்கிரசின் எம்பி மஹூவா மொய்த்ரா, காங்கிரசின் சசிதரூர், உத்தவ் தாக்கரே அணி சிவசேனாவை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மியின் ராகவ் சதா உள்ளிட்ட எம்பிக்களின் ஆப்பிள் ஐபோனுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் அரசு ஆதரவு பெற்ற நபர்கள் மூலம் செல்போன் உளவு பார்க்க முயற்சிக்கப்படுவதாக எச்சரிக்கை குறுந்தகவல் வந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அரசின் சைபர் பாதுகாப்பு ஏஜென்சியான சிஇஆர்டி விசாரணைையை தொடங்கியுள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவனத்துக்கு சிஇஆர்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் செயலாளர் எஸ் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ ஆப்பிள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைப்பார்கள்” என்றார்.

The post எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு குறுந்தகவல் ஆப்பிள் நிறுவனத்துக்கு சைபர் பாதுகாப்பு பிரிவு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Cyber Security Department ,Apple ,New Delhi ,security ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு