×

நவகிரகங்களும் உபகிரகங்களும் 3

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

உபகிரகங்களை பற்றி ஆய்வு செய்யும் பொழுது சில கிரகங்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட உபகிரகங்கள் உள்ளன. அவ்வாறு ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் அவற்றின் ஸ்புடங்களையும் அவற்றின் பலன்களையும் ஆய்வு செய்தல் அவசியம். ஒவ்வொரு கிரகங்களும் உபகிரகங்களும் இந்த பேரண்டத்தில் ஒவ்வொரு மாற்றத்தினை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. அவற்றினை உணரும் தன்மையும் மாற்றத்தை அறிந்து கொள்ளும் பட்சத்தில்தான் நமக்கு அந்த கிரகங்கள் மற்றும் உபகிரகங்களின் இருப்புநிலையை அறிய முடியும். இது அவரவர்களுக்கு உள் ஏற்படும் உள்ளுணர்வே வழி நடத்துகிறது. அந்த உள்ளுணர்வின் வழியேதான் நாம் கிரகங்கள் மற்றும் உபகிரகங்களின் காரகத்துவங்கள் வழியே ஆய்ந்தறிந்து பலன்களையும் குறிப்பிடலாம்.

காலன்: (சூரியனின் உபகிரகம்) காலன் பாகையை கணக்கிட அன்றைய உதய நாழிகையை 30 பாகையால் வகுத்தால் கிடைக்கின்ற அளவினை ‘அகசு’ நாழிகையால் பெருக்க கிடைக்கும் அளவே காலனின் பாகை ஆகும். (சூரியன் உதயம் முதல் மறைகின்ற வரை உள்ள நாழிகை “அகசு நாழிகை’’ ஆகும்). காலனுக்கும் சூரியனை போலவே மேஷம் உச்ச வீடாகவும் சிம்மம் ஆட்சி வீடாகவும் துலாம் நீச வீடாகவும் உள்ளது. ரிஷபம், கடகம், தனுசு, கும்பம், மீனம் நட்பு வீடுகள், மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம் பகை வீடுகளாகும்.

கலைஞானன்: (சந்திரனின் மற்றொரு உபகிரகம்) கலைஞானனுக்கு கடகம் ஆட்சி வீடாகவும் ரிஷபம் உச்ச வீடாகவும் விருச்சிகம் நீச வீடாகவும் உள்ளது. பரிவேடன் அல்லாது கலைஞானனும் சந்திரனின் உபகிரகமாக உள்ளது.

சுரேஷன்: (செவ்வாயின் மற்றொரு உபகிரகம்) சுரேஷனுக்கு மேஷம், விருச்சிகம் ஆட்சி வீடாகவும் மகரம் உச்ச வீடாகவும் கடகம் நீச வீடாகவும் உள்ளது. சிம்மம், தனுசு, மீனம் நட்பு வீடுகள். மிதுனம், கன்னி பகை வீடுகள். மற்ற ராசி சம வீடுகளாக உள்ளது. தூமகேது அல்லாது இந்த சுரேஷனும் செவ்வாயின் மற்றொரு உபகிரகமாக உள்ளது. இந்த சுரேஷனின் காரகத்துவங்கள் யாவும் செவ்வாயின் காரகத்துவங்களை போன்றே அமைந்துள்ளது.

அர்த்தப் பிரகரணன்: (புதனின் உபகிரகம்) அர்த்தப் பிரகரணனுக்கு மிதுனம், கன்னி ஆட்சி வீடாகவும் மீனம் நீச வீடாகவும் உள்ளது. ரிஷபம், சிம்மம், துலாம் ஆகியவை நட்பு வீடுகள். கடகம் பகை வீடாக உள்ளது. மற்ற ராசி வீடுகள் சம வீடுகளாக உள்ளது.

யமகண்டன்: (வியாழனின் உபகிரகம்) எமகண்டனுக்கு தனுசு, மீனம் ஆட்சி வீடாகவும் கடகம் உச்ச வீடாகவும் மகரம் நீச வீடாகவும் உள்ளது. மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகியவை நட்பு வீடுகளாகவும் ரிஷபம், மிதுனம், துலாம் ஆகியவை பகை வீடுகளாகவும் உள்ளது.

விட கடிகை: (சுக்கிரனின் மற்றொரு உபகிரகம்) விட கடிகைக்கு துலாம் ஆட்சி வீடாகவும் மீனம் உச்ச வீடாகவும் கன்னி நீச வீடாகவும் உள்ளது. மிதுனம், தனுசு, மகரம், கும்பம் ஆகியவை நட்பு வீடுகளாகவும் கடகம், சிம்மம் ஆகியவை பகை வீடுகளாகவும் உள்ளது.

மாந்தி: (சனியின் உபகிரகம்) கும்பம் ஆட்சி வீடாகவும் மகரம் உச்ச வீடாகவும் அமையும்.

அமிர்தகடிகை: (ராகுவின் மற்றொரு உபகிரகம்) அமிர்தகடிகைக்கு ரிஷபம் உச்ச வீடாகவும் விருச்சிகம் நீச வீடாகவும் உள்ளது. மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகியவை நட்பு வீடுகளாகும். மேஷம், கடகம், சிம்மம், கும்பம் ஆகியவை பகை வீடுகளாகும்.

அவமிருந்து: (கேதுவின் மற்றொரு உபகிரகம்) அவமிருந்துவிற்கு விருச்சிகம் உச்ச வீடாகவும் ரிஷபம் நீச வீடாகவும் உள்ளது. மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகியவை நட்பு வீடுகளாக உள்ளது. மேஷம், கடகம், சிம்மம், கும்பம் ஆகியவை பகை வீடுகளாக உள்ளது.

மேற்கண்ட உபகிரகங்கள் யாவும் எதிர்மறையாக உள்ள பலன்களாகவே உள்ளன. காரகங்களை அறிந்து கொள்வதற்கு மிகவும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.

The post நவகிரகங்களும் உபகிரகங்களும் 3 appeared first on Dinakaran.

Tags : Sivaganesan ,
× RELATED ருசக யோகம்