×

ஈரானில் 7 மாதங்களில் 419 பேருக்கு மரண தண்டனை: சென்ற ஆண்டைவிட 30% அதிகம் என ஐ.நா. தலைவர் அறிக்கை

தெஹ்ரான்: ஈரானில் கடந்த 7 மாதங்களில் 419 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் அபாயகரமான விகிதத்தில் மரண தண்டனைகளை நிறைவேற்றுவதாக குற்றம் சாட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியா குட்டெரெஸ் இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 419 பேரை அந்த நாடு தூக்கிலிட்டு கொன்றுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 30% அதிகம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 2022 செப்டம்பரில் முறைப்படி ஹிஸாப் அணியவில்லை என்று கூறி அறநெறி காவலர்களால் கைது செய்யப்பட்ட 22 வயது மஹ்ஸா அமினி கொலையை தொடர்ந்து ஏற்பட்ட போராட்டம் தொடர்பாக ஈரானில் இதுவரை 7 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக குட்டெரெஸ் கூற்றியுள்ளார். இந்த 7 வழக்குகளிலும் நீதித்துறையின் நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் நியாயமாக நடைபெறவில்லை என்று குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

The post ஈரானில் 7 மாதங்களில் 419 பேருக்கு மரண தண்டனை: சென்ற ஆண்டைவிட 30% அதிகம் என ஐ.நா. தலைவர் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Iran ,UN ,Tehran ,Dinakaran ,
× RELATED ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில்,...