×

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது: மேயர் பிரியா பேட்டி

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் தேங்கும் இடங்களை கண்காணிப்பதற்கான கட்டுப்பாட்டு அறையை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் பிரியா; மாநகராட்சி மண்டலம் 1,2,3,-ல் மழைநீர் வடிகால் பணிகள் முடிவுக்கு வரஉள்ளது.

மீதமுள்ள மழைநீர் வடிகால் பணிகள் ஜனவரியில் நிறைவுபெறும். சுமார் 55 கி.மீ தூரத்திற்கு மழை நீர் வடிகால் வாய்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகளில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மழை பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு 1913, 044-25619204, 044-25619207 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

The post வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது: மேயர் பிரியா பேட்டி appeared first on Dinakaran.

Tags : CHENNAI MUNICIPALITY ,MONSOON ,MAYOR ,PRIYA ,Chennai ,Municipality ,northeastern ,Chennai Municipal Complex ,Northeast Monsoon ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!