×

திருத்துறைப்பூண்டி அருகே 300 ஏக்கர் சம்பா பயிர்கள் கருகின: தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர்கள் கருகியதால் விவசாயிகள் புகார்!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீர் இல்லாமல் சுமார் 300 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் சம்பா பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 80,000க்கும் மேற்பட்ட பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடைமடை பகுதிகளுக்கு போதிய தண்ணீர் சென்று சேராததால் பல்வேறு பகுதியிலும் குறுவை பயிர்கள் கருகியது.

இதனையடுத்து விவசாயிகள் குறுவை பயிர்கள் டிராக்டர் இயந்திரம் மூலம் பயிரை அழித்து விட்டு சம்பா சாகுபடி செய்யலாம் என்று சம்பா நேரடி விதைப்பு மூலம் சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் தர முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டதால் திருத்துறைப்பூண்டி அருகே நாராயணபுரம் பகுதியில் சுமார் 300 ஏக்கர்க்கு மேற்பட்ட பரப்பளவில் சம்பா பயிர்கள் கருகியாதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கி சம்பா சாகுபடி செய்ததாக விவசாயிகள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

The post திருத்துறைப்பூண்டி அருகே 300 ஏக்கர் சம்பா பயிர்கள் கருகின: தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர்கள் கருகியதால் விவசாயிகள் புகார்!! appeared first on Dinakaran.

Tags : Thiruthuraipoondi ,Tiruthurapoondi ,Tiruvarur district ,Thiruthurapoondi ,
× RELATED பள்ளிகள் திறப்பதற்கு முன்ேப வரும்...