×

தீபாவளியை முன்னிட்டு வண்ணாரப்பேட்டையில் 2 இடத்தில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு: 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது

தண்டையார்பேட்டை: சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணி கடைகள் உள்ளன. இங்கு பெண்கள், குழந்தைகளுக்கு குறைந்த விலையில் துணி கிடைப்பதால் அதிகளவில் வருகின்றனர். சூரத், கொல்கத்தா, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகின்றனர். புதுப்புது டிசைன்களில் துணிகள் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், ஆடி தள்ளுபடி ஆகிய நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.

இந்நிலையிலி வரும் 12ம்தேதி தீபாவளி பண்டிகை என்பதால், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்து விதமாகவும், திருட்டு சம்பவங்களை தடுக்கும் விதமாகவும், துணி எடுக்க வருபவர்கள் அழைத்துவரும் குழந்தைகளை தவறவிடுவது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் நல சங்கம் சார்பில், எம்சி ரோடு, ஜிஏ ரோடு ஆகிய 2 இடங்களில் மின்விளக்கு, ஒலிபெருக்கியுடன் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டள்ளது. இந்த கோபுரத்தில் நின்றபடி போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரத்தை இயக்கிவைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், சென்னை மாநகராட்சி நகரமைப்பு நிலை குழு தலைவர் இளைய அருணா கலந்துகொண்டு கண்காணிப்பு கோபுரத்தை இயக்கி வைத்தார்.

The post தீபாவளியை முன்னிட்டு வண்ணாரப்பேட்டையில் 2 இடத்தில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு: 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Vannarpetti ,Diwali ,Thandaiyarpet ,MC Road ,Chennai ,Vannarpet ,Dinakaran ,
× RELATED ‘சர்தார் 2’ படப்பிடிப்பின்போது...