×

கோவை சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணையில் மழைநீருடன் ரசாயன நுரை மலை போல் தேக்கம்.. துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி..!!

கோவை: கோவை நொய்யல் ஆற்றின் வழித்தடமான சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணையில் மழைநீருடன் சாய கழிவு கலப்பதால் ஏற்பட்ட ரசாயன நுரை மலை போல் குவிந்துள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நொய்யல் ஆற்றின் வழித்தடமான ஆத்து பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணையில் சாய கழிவு கலந்து வரும் மழைநீரால் தடுப்பணையில் வெள்ளை நிறத்தில் நுரை தேங்கி ரசாயன நுரை மலை போல் குவிந்துள்ளது.

ரசாயன கழிவு கலந்த ஆற்று நீர் வெள்ளலூர், சூலூர் வழியாக செல்கிறது. நொய்யல் ஆற்றில் கலக்கும் ரசாயன கழிவு நீரால் ஆற்று நீர் செல்லும் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே உடனடியாக நொய்யல் ஆற்றில் ரசாயன கழிவு நீர் கலப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post கோவை சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணையில் மழைநீருடன் ரசாயன நுரை மலை போல் தேக்கம்.. துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Noyal River ,Dinakaran ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...