×

நடிகர் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவால் காலமானார் : வின்னர், கும்கி, சாட்டை, புலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர்!!

சென்னை : நடிகர் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவால் சென்னை வளசரவாக்கத்தில் காலமானார். அவருக்கு வயது 70. பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் 3வது மகன் ஜூனியர் பாலையா.ஜூனியர் பாலையா ஜூன் 28 ம் ஆண்டு 1953ம் ஆண்டில் பிறந்தவர்.இவரது இயற்பெயர் ரகு பாலையா.1975ம் ஆண்டு ‘மேல்நாட்டு மருமகள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை , தனி ஒருவன், புலி உள்ளிட்ட 280க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.சித்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வயது மூப்பு காரணமாக மூச்சுதிணறல் ஏற்பட்டு படுக்கையில் இருந்து தவறி கீழே விழுந்து இயற்கை எய்தியுள்ளார். ஜூனியர் பாலையா மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் வளசாரவாக்கத்தில் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள், நண்பர்கள், திரையுலகத்தினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். நாளை அவரது உடல் தகனம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

The post நடிகர் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவால் காலமானார் : வின்னர், கும்கி, சாட்டை, புலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர்!! appeared first on Dinakaran.

Tags : Junior Balaya ,Winner ,Kumki ,Chatti ,Chennai ,Junior Balaiah ,D. S. Balaia ,Chattai ,
× RELATED ஆஸி. ஓபன் டென்னிஸ் யானிக் சின்னர் சாம்பியன்