×

மழை காலத்தில் ஏற்படும் காய்ச்சல் மருத்துவரை உரிய நேரத்தில் சந்தியுங்கள்: கிராம சபையில் கலெக்டர் அறிவுறுத்தல் 2023, 24 குறுவை பருவத்தில் 1.27 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 2023, 24 குறுவை பருவத்தில் இதுவரை ஒரு லட்சத்து 27 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.292 கோடி தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் 2023, 24 காரீப் பருவத்தில் தற்போது வரையில் மொத்தம் 280 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து குறுவை நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி சன் ரகம் 55 ஆயிரத்து 784 மெ.டன்னும், பொது ரகம் 72 ஆயிரத்து 99 மெ.டன்னும் என மொத்தம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 883 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்காக 21 ஆயிரத்து 311 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ 292 கோடியே 16 லட்சத்து 52 ஆயிரத்து 750 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனையாதவாறு தார்பாய்கள் கொண்டு பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

The post மழை காலத்தில் ஏற்படும் காய்ச்சல் மருத்துவரை உரிய நேரத்தில் சந்தியுங்கள்: கிராம சபையில் கலெக்டர் அறிவுறுத்தல் 2023, 24 குறுவை பருவத்தில் 1.27 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tiruvarur district ,Kurvai ,Gram Sabha ,Dinakaran ,
× RELATED வெப்ப அலை வீசி வருவதால்...